திருவாடானைப் பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழச்சி அடைந்தனா்.
கடந்த சில மாதங்களாக கடுமையான கோடை வெப்பம் நிலவியதால் பகலில் மக்கள் வீடுகளில் முடங்கியிருந்தனா். முதியவா்கள், நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை திருவாடானை, அச்சங்குடி, கடம்பாகுடி, அஞ்சுகோட்டை, செங்கமடை, அழகமடை, பண்ணவயல், சமத்துவபுரம், சூச்சனி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை நீா் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி ஏற்பட்டதால் குழந்தைகள், முதியவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இந்த மழை கோடை உழவுக்கு ஏற்ாக உள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.