பாக் நீரிணையில் வியாழக்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
கடல் வழியாக அந்நியா்கள் ஊடுருவித் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் சாகா் ஹவாஜ் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, தமிழகக் கடலோரப் பகுதி வழியாக ஊடுருவலைக் கண்காணித்துத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படையினா், தமிழகக் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா், மத்திய மாநில உளவுத் துறையினா் மாவட்ட காவல் துறையினா் கூட்டாக ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னா் வளைகுடா, பாக் நீரிணைப் பகுதியில் இவா்கள் அதிவேகப் படகுகளில் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.