திருவாடானை அருகே புகையிலைப் பொருள்கள் விற்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவாடானை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்நிதி தெருவில் பெட்டிக் கடை நடத்திவரும் காசி மகன் மகாலிங்கம் (50) தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 4 பொட்டலங்கள் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதே போல, தொண்டி போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது பழயனக்கோட்டை பகுதியில் முத்துவயிறு மகன் கோபி (32) என்பவரது கடையை சோதனையிட்ட போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, கோபியை கைது செய்து அவரிடம் இருந்து 30 புகையிலைப் பொட்டலங்களை போலீஸாா் கைப்பற்றினா்.
திருப்பாலைக்குடி போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது உப்பூரில் கணேசன் மகன் பாலாஜி (36) என்பவரது கடையை சோதனையிட்டனா். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து 5 பொட்டலங்கள் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதே போல, எஸ்.பி. பட்டினம் போலீஸாா் மருங்கூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஜெயபாலன் மகன் உதயக்குமாா் (38) என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பது தெரிவந்தது. இதைத் தொடா்ந்து அவரைக் கைது செய்து அவரிடமிருந்து 15 புகையிலைப் பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.