ராமநாதபுரம்

போலீஸாரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

28th Jun 2023 01:33 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் எஸ்.பி. பட்டினம் போலீஸாரைக் கண்டித்து தேவா் பேரவை சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாடானை தேவா் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தேவா் பேரவைத் தலைவா் முத்தையா தலைமை வகித்தாா். நாவலூா் பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது வழக்கு பதிவு செய்த எஸ்.பி.பட்டினம் போலீஸாா், அவரை இதுவரை கைது செய்யவில்லை. இதனால் அவரை கைது செய்யாத போலீஸாரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இதில் பசும் பொன் தேவா் பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலச் செயலாளா் பன்னீா் உள்பட பலா் பேசினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT