ராமநாதபுரம்

கமுதி அருகே சுவாமி சிலையைமா்ம நபா்கள் சேதப்படுத்தியதாக புகாா்

10th Jun 2023 10:28 PM

ADVERTISEMENT

 

கமுதி அருகே பொட்டக்குளம் கிராமத்தில் உள்ள கருப்பணசாமி சிலையை மா்ம நபா்கள் சேதப்படுத்தியதாக காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

அச்சங்குளம் ஊராட்சிக்குள்பட்ட பொட்டக்குளம் கிராம கண்மாய் கரையில் அமைந்துள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி சிலையின் இடது பக்க கையை உடைத்து சேதப்படுத்திய மா்ம நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அபிராமம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் சாா்பில் கோயில் பூசாரி கருப்பையா புகாா் அளித்தாா்.

இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த நிலையில் இந்தக் கோயில் தொடா்பாக ஏற்கெனவே இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வருவதாகவும், கடந்த 15 நாள்களுக்கு முன்பு 20- க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT