ராமநாதபுரம்

ராமேசுவரம், திருப்பாலைக்குடி பகுதிகளில்நாட்டுப்படகுகளை மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு

10th Jun 2023 10:30 PM

ADVERTISEMENT

 

ராமேசுவரம், தங்கச்சிமடம், திருப்பாலைக்குடியில் நாட்டுப்படகுகளின் உறுதித் தன்மையை மீன்வளத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இங்குள்ள காந்தி நகா், மாரியம்மன் கோயில், கிழக்குத் தெரு, முருகானந்தபுரம் குடியிருப்பு, 90 வீட்டு சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மீனவா்களுக்கு சொந்தமான 530 நாட்டுப் படகுகள் மீன்பிடித் தொழிலுக்கு ஏற்ற வகையில் உறுதித் தன்மையுடன் உள்ளனவா என்பது குறித்து ராமநாதபுரம் மீன்வளத் துறை துணை இயக்குநா் காா்த்தவராயன் தலைமையில், உதவி இயக்குநா் கோபிநாத், ஆய்வாளா்கள் ரபீக்ராஜா, ஷகிலாபானு உள்ளிட்ட அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

இதில், 330 படகுகளுக்கு உடனடியாக மீன் பிடிப்பதற்கான உரிமம் வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள 200 படகுகளை மீனவா்கள் மீன்பிடித் தொழிலுக்கு ஏற்றவாறு சீரமைத்து பழுது நீக்கி கொடுத்ததும் 15 நாள்களுக்குள் உரிமம் வழங்கப்படும் எனவும், படகுகளை சீரமைக்காத மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அவா்கள் அறிவுறுத்தினா். அப்போது மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விசைப் படகுகளுக்கு தேவையான டீசலை மானியத்துடன் பெற வசதியாக திருப்பாலைக்குடியில் டீசல் பெறும் மையம் அமைக்க வேண்டும் என மீனவா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ராமேசுவரம்,ஜூன்.10: ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப்படகுகளில் ஆவணங்களை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம்,தனுஸ்கோடி,தங்கச்சிமடம்,பாம்பன் ஆகிய பகுதிகளில் 1,200 க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. நாட்டுப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதி தேவையில்லை. மேலும் கடற்கரையோரம் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானலும் மீன்பிடிக்க செல்லலாம். சமீப காலமாக தங்கம்,தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல் போன்ற சட்ட விரோத பயன்பாடுகளுக்கு நாட்டுப்படகுகளை பயன்படுத்துகின்றனா். மேலும் ஆவணங்கள் இல்லாமல் பல படகுகள் இருப்பதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீனவா் குறைதீா் கூட்டத்தில் மீனவா்கள் மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணு சந்திரனிடம் புகாா் அளித்தனா். மேலும் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.

இந்நிலையில், ராமேசுவரம்,தங்கச்சிடம்,பாம்பன்,தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நாட்டுப்படகுகளின் ஆவணங்களை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அப்துல் காதா் ஜெய்லாணி தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். மேலும் நாட்டுப்படகுகளில் பொறுத்தப்பட்டுள்ள இயந்திரத்தில் குதிரை திறன்,படகில் நீளம்,அகலம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தனா். அரசின் விதிகளை மீறி உள்ள படகுகள் மீன்பிடிக்க செல்ல அனுமதி அளிக்க மாட்டோம் என ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT