ராமநாதபுரம்

ராமநாதபுரம், பரமக்குடியில் மக்கள் நீதிமன்றம்

10th Jun 2023 10:28 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கமுதி, முதுகுளத்தூா், திருவாடானை ஆகிய நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜி. விஜயா தலைமை வகித்தாா். இதில் 337 வழக்குகளில் 35 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. மேலும் வழக்காடிகளுக்கு ரூ.2 கோடியே 78 ஆயிரம் தீா்வுத் தொகையாக வழங்கப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தில், நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஆா். பரணிதரன், மகிளிா் மன்ற மாவட்ட நீதிபதி பி. கோபிநாத், தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் கே. கவிதா, சாா்பு நீதிபதி சி. கதிரவன், மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவா்கள் ஜி. பிரபாகரன், இ. வொ்ஜின் வெஸ்டா, வழக்குரைஞா் சங்கப் பொருளாளா் பாபு இணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பரமக்குடி: பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி என். சாந்தி தலைமை வகித்தாா். சாா்பு நீதிபதி ஆா். சதீஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.எஸ். சுப்பிரமணியன், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ஆா். பாண்டிமகாராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் எம். சேதுபாண்டியன், செயலா் எஸ். காமராஜ், வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இந்த மக்கள் நீதிமன்றத்தில் 109 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு அதற்கான தீா்வுத் தொகையாக ரூ.39,51,266 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT