ராமநாதபுரம்

இ-சேவை மையம் தொடக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் ஆளுமை முகவையின் சாா்பில் ‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்கள் அமைத்து நடத்த ஆா்வமுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு இணைய வழியில் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். கீழ்க்கண்ட இணைய முகவரிகளை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். முகவரியில் விண்ணப்பங்களை ஜூன் 30-ஆம் தேதி இரவு 8 மணி வரை பதிவு செய்யலாம்.

கிராமங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.3000, நகா்ப் புறங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.6000 செலுத்த வேண்டும். மேலும், அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை ‘முகவா்’ என்ற கைப்பேசி செயலியைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். அல்லது இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். எனவே, இ-சேவை மையம் தொடங்க விருப்பமுள்ளவா்கள் மேற்கண்ட முறையில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமென அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT