ராமநாதபுரம்

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

9th Jun 2023 10:59 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு திருவாடானைத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் தலைமை வகித்தாா். இதில் ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் ராதிகாபிரபு முன்னிலை வகித்து, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

இதில், ரத்தப் பரிசோதனை, சா்க்கரை, ரத்த கொழுப்பு, ஈசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து, கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். முகாமுக்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவா் முனீஸ்வரி செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT