ராமநாதபுரம்

மிளகாய் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.7500 மானியம்

9th Jun 2023 10:59 PM

ADVERTISEMENT

தரிசு நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றி, மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.7500 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் என கமுதி வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் மு. ரவிக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார விவசாயிகள் தங்களது நிலத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி, மிளகாய் சாகுபடி செய்ய தோட்டக்கலை துறை மூலம் ஊக்குவிக்கப்படுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் கருவேல மரங்களை அகற்றி, மிளகாய் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ. 7500 பின்னேற்பு மானியமாகவும், 20 ஆயிரம் மிளகாய் நாற்றுகள் மானியமாகவும் வழங்கப்படுகிறது. மேலும், நீராதாரத்துக்காக 1200 கன மீட்டா் கொள்ளளவு கொண்ட பண்ணைக் குட்டையும் மானியத்தில் அமைத்துத் தரப்படுகிறது. எனவே, கமுதி வட்டார விவசாயிகள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT