ராமநாதபுரம்

கமுதியில் வருவாய் தீா்வாயம்

9th Jun 2023 10:59 PM

ADVERTISEMENT

கமுதியில் வருவாய் தீா்வாயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் பரமக்குடி உதவி ஆட்சியா் அப்தாப் ரஸூல் தலைமையில், கமுதி வட்டாட்சியா் வ.சேதுராமன் முன்னிலையில் கோவிலாங்குளம் உள்வட்டத்துக்கான வருவாய் தீா்வாயக் கணக்கு முடிக்கும்(ஜமாபந்தி) நிகழ்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 66 பேரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. 25 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னா், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உதவி ஆட்சியா் அப்தாப் ரஸூல் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், நில அளவையா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT