ராமநாதபுரம்

மஞ்சக்கொல்லை ஊராட்சியில் ஆலோசனைக் கூட்டம்

9th Jun 2023 10:59 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், போகலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மஞ்சக்கொல்லை ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்ற பொதுமக்களிடம் அரசின் நலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னா், ஆட்சியா், அதிகாரிகள் ஊராட்சியில் உள்ள ஒவ்வோா் பகுதிக்கும் சென்று வருவாய்த் துறை சான்றுகள் எளிதாகக் கிடைக்கிா, நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்து கேட்டறிந்தனா். மேலும், ஊராட்சியின் வளா்ச்சிக்குத் தேவையான திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். இதில் அந்த ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT