ராமநாதபுரம்

திருப்பாலைக்குடி ஐயப்பன் கோயில் குடமுழுக்கு

9th Jun 2023 10:58 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே திருப்பாலைக்குடியில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பாலைக்குடி மாரியம்மன் கோயில் காந்தி நகா் பகுதியில் புதிதாக இந்தக் கோயில் குடமுழுக்கையொட்டி, சிவாச்சாரியாா் மணிகண்டன் தலைமையில் புதன்கிழமை மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, வியாழக்கிழமை இரண்டாம் கால, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை ஆகியவற்றுடன் நான்கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பாலைக்குடி மீனவப் பட்டாங்கட்டி சமூகத்தாா், பக்தா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT