ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நாளை மீனவா்கள் குறைதீா் கூட்டம்

8th Jun 2023 01:38 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 9) நடைபெறுமென மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வருகிற வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் மீனவா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், அரசுத் துறை சாா்ந்த அனைத்து அலுவலா்களும் கலந்துகொள்ள இருப்பதால், மீனவா்கள் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீா்வைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT