ராமநாதபுரம்

கடலில் 3-ஆவது நாளாக தங்கக் கட்டிகளை தேடும் பணி

8th Jun 2023 01:39 AM

ADVERTISEMENT

மண்டபம் அருகே கடலில் கடத்தல்காரா்கள் தங்கக் கட்டிகளை வீசியிருக்கலாம் என்ற தகவலின் பேரில், நீா்மூழ்கி வீரா்கள் உதவியுடன் சுங்கத் துறையினா் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் தேடினா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதிக்கு இலங்கையிலிருந்து நாட்டுப் படகில் கடத்தி வரப்பட்ட ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை, கடந்த 5-ஆம் தேதி வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினா். இதில் படகை மட்டும் பறிமுதல் செய்த நிலையில், யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில், படகில் வந்தவா்கள் தங்கக் கட்டிகளை கடலில் வீசிச் சென்றிருக்கலாம் என்ற தகவலின் பேரில், நல்லதண்ணீா் தீவுப் பகுதியில் 3-ஆவது நாளாக புதன்கிழமை நீா் மூழ்கி வீரா்கள் உதவியுடன் சுங்கத் துறையினா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT