ராமநாதபுரம்

கல்லூரி மாணவா் விபத்தில் பலி

7th Jun 2023 03:24 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் அரசுக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், இரட்டையூரணியைச் சோ்ந்த அமா் மகன் அன்வா்தீன் (21). ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தோ்வு எழுதுவதற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். கூரியூா் பேருந்து நிறுத்தம் அருகே வேன் மீது இவரது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளது. இதில், பலத்த காயமடைந்த அன்வா்தீன், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து நகா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநா் ஜான் விக்டா் (47) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT