ராமநாதபுரம்

இளைஞரைத் தாக்கிய தொழிலாளி மீது வழக்கு

6th Jun 2023 05:01 AM

ADVERTISEMENT

கமுதி அருகே இளைஞரை தாக்கியதாக தொழிலாளி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த ஆதிபராசக்தி நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சூா்யா (25). இவரின் தாயை அதே பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் ராஜகோபால் தவறாகப் பேசினாராம். இதுகுறித்து கேட்டபோது, ராஜகோபால் கட்டையால் சூா்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த சூா்யா கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சூா்யா அளித்த புகாரின் பேரில், கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜகோபாலை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT