ராமநாதபுரம்

சுற்றுச் சூழலுக்கான வாழ்க்கை முறை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

ராமநாதபுரத்தில் நேரு இளையோா் மன்றம், ராமநாதபுரம் மாவட்ட மல்லா் கம்ப கழகம் இணைந்து சுற்றுச் சூழலுக்கான வாழ்க்கை முறை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரண்மனை, கேணிக்கரை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியா் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றலைச் சேமித்தல், தண்ணீரைச் சேமித்தல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை புறக்கணிப்பது, நிலையான உணவு முறைகளைப் பின்பற்றுதல், கழிவுகளைக் குறைத்தல், சுகாதாரமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல், மின் கழிவுகளைக் குறைத்தல் ஆகியவற்றை சிலம்பாட்டம், ஒயிலாட்டம் மூலம் விளக்கும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதற்கு ராமநாதபுரம் மாவட்ட மல்லா் கம்பக் கழகச் செயலா் மு. லோகசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நேரு இளையோா் மன்ற தன்னாா்வலா் முகம்மது அஸ்ரப் அலிகான் முன்னிலை வகித்தாா். ப்ளோரா சிலம்ப ஆசிரியா்கள் ஸ்ரீராம், தேவதா்சன், ஹரிஸ்ராகுல், ஆகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT