ராமநாதபுரம்

காவல்துறை பாதுகாப்புடன் கழுங்கு கருப்பணசாமி கோயில் குடமுழுக்கு விழா

DIN

கமுதி அருகே உள்ள மண்டலமாணிக்கம் கழுங்கு கருப்பணசாமி கோயிலில் காவல்துறை பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஏற்கெனவே இருந்த பழைய கருப்பணசாமி சிலைக்குப் பதிலாக புதிய கருப்பணசாமி சிலையை வைத்து குடமுழுக்கு நடத்துவது தொடா்பாக முதுகுளத்தூா் பகுதியைச் சோ்ந்த கருணாநிதி தரப்பினருக்கும், மதுரையைச் சோ்ந்த கருப்பசாமி தரப்பினருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.

இதையடுத்து, கமுதி வட்டாட்சியா் சேதுராமன் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்படாததால் குடமுழுக்கு நடத்த வருவாய்த் துறையினா் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில், கமுதி காவல் துறையினா் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி குடமுழுக்கு நடத்த அனுமதி அளித்தனா்.

ஆனால் கருப்பசாமி தரப்பினா் பழைய கருப்பணசாமி சிலையை வைத்த பிறகே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனா். இதனிடையே கமுதி காவல் ஆய்வாளா் (பொறுப்பு) அபுதல்ஹா தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினரின் பாதுகாப்புடன் கருப்பணசாமி கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் கருப்பசாமி தரப்பினா் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணம் அளிப்பு

பரமக்குடியிலிருந்து 303 வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கிரேன் மோதியதில் முதியவா் பலி

சாத்தூா் அருகே 1,300 கிலோ குட்கா பறிமுதல் -3 போ் கைது

அனுமதியின்றி கொண்டு சென்ற பேன்சிரக பட்டாசுகள் பறிமுதல் -வேன் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT