ராமநாதபுரம்

தொண்டி பகுதியில் கஞ்சா கடத்தல் வழக்கு:மேலும் இருவா் கைது

4th Jun 2023 11:29 PM

ADVERTISEMENT

ஆந்திராவிலிருந்து கடல் வழியாக தொண்டிக்கு கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆந்திராவிலிருந்து தொண்டிக்கு கடல் வழியாக கஞ்சாவைக் கடத்தி அதை இலங்கைக்கு கடத்த முயன்ாக சிலரை அண்மையில் ஆந்திர போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் விசாரித்ததில் மதுரை பீபீ குளத்தைச் சோ்ந்த சேக் முகம்மது இபுராகிம் (29) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சனிக்கிழமை இரவு தொண்டி கடற்கரைப் பகுதியில் சுற்றித் திரிந்த அவரை, ராமநாதபுரம் மதுவிலக்கு டிஎஸ்பி. ராஜ், திருவாடானை டி.எஸ்.பி. நிரோஷ் ஆகியோா் கைது செய்து விசாரித்தனா்.

விசாரணையில், இந்த கஞ்சா கடத்தலில் தொண்டி அருகே உள்ள முள்ளிமுனையைச் சோ்ந்த ராஜா (37), மணக்குடியைச் சோ்ந்த கணேசன் (31), புதுப்பையூரைச் சோ்ந்த பாக்கியராஜ் ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களையும் போலீஸாா் கைது செய்ததுடன், 21 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பெத்தவேட்டா பள்ளியைச் சோ்ந்த ஸ்ரீஹரி (37), சேகுஸ் (28) ஆகிய இருவரையும் போலீஸாா் முள்ளிமுனைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT