ராமநாதபுரம்

ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதிகளில் அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் அவதி

4th Jun 2023 11:29 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இந்தப் பகுதிகளில் பகல், இரவு என்று பாராமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து சீரான மின் விநியோகம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT