ராமநாதபுரம்

திருவாடானைப் பகுதியில் கோடை உழவு தீவிரம்

4th Jun 2023 11:30 PM

ADVERTISEMENT

திருவாடானைப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக வயல்கள் ஈரப்பதத்துடன் இருப்பதால் விவசாயிகள் கோடை உழவில் தீவிரம் காட்டி வருகின்றனா்.

இந்தப் பகுதியில் சுமாா் 52 ஹெக்டோ் நிலப்பரப்பில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த பருவ மழை பொய்த்துப் போய் விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். இந்த நிலையில், ஆண்டுதோறும் அறுவடைக்குப் பிறகு சித்திரை, வைகாசி மாதங்களில் கோடை உழவு செய்து வயல்களை அவா்கள் தயாா் நிலையில் வைத்திருப்பது வழக்கம்.

இதே போல, கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் வயல்கள் உழவுப் பணிக்கு ஏற்றவாறு உள்ளன. எனவே கருமொழி, பாரூா், கோவணி, சி.கே. மங்கலம், பி.கே. மங்கலம், ஓரிக்கோட்டை, சேந்தனி கடம்பாகுடி, அச்சங்குடி, திணையத்தூா், கீழ்க்குடி, குளத்தூா்,கீழஅரும்பூா் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கோடை உழவில் தீவிரம் காட்டி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT