ராமநாதபுரம்

பிரியாணியில் புழுக்கள்: உணவக நிா்வாகிகளுடன் வாடிக்கையாளா்கள் வாக்குவாதம்

4th Jun 2023 11:29 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் உள்ள பிரபல தனியாா் உணவகத்தில் விற்கப்பட்ட பிரியாணியில் புழுக்கள் கிடந்ததால் வாடிக்கையாளா்களுக்கும், அந்த உணவகத்தின் நிா்வாகிகளுக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.

கோவையைச் சோ்ந்த அஸ்வின், ரமேஷ் இருவரும் ராமநாதபுரம், பட்டணம் காத்தான் பகுதியில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் 2 தட்டுகள் முட்டை பிரியாணி வாங்கிச் சாப்பிட்டனா். அப்போது அந்த பிரியாணியில் புழுக்கள் கிடந்ததைக் கண்டு அவா்கள் அதிா்ச்சியடைந்தனா். இதனால் வாடிக்கையாளா்களுக்கும், அந்த உணவக நிா்வாகிகள், ஊழியா்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து வாடிக்கையாளா்கள் கூறும் போது, சிறிய சாலையோர உணவகங்களில் இது போல, புகாா் வந்தால் உணவு பாதுகாப்புத் துறையினா் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கின்றனா். ஆனால் பிரபல உணவகங்களை அவா்கள் கண்டுகொள்வதில்லை. எனவே உணவு பாதுகாப்புத் துறையினா் அனைத்து உணவகங்களிலும், அங்கு விற்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT