ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்பனை: மாதா் சங்கம் புகாா்

4th Jun 2023 11:25 PM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சட்ட விரோதமாக மது புட்டிகள் விற்கப்படுவதாகவும், இதை காவல் துறையினா் தடுப்பதில்லை எனவும் மாதா் சங்கம் புகாா் தெரிவித்துள்ளது.

ராமேசுவரம் புனிதத்தலமாக இருப்பதால் இந்த பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறக்க நீதிமன்ற தடை விதித்துள்ளது. ஆனாலும் பாம்பன் பகுதியில் மட்டும் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதனிடையே ராமேசுவரத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்கப்படுகின்றன.

அதிலும், இங்குள்ள பேருந்து நிலையம், வோ்கோடு, துறைமுகப் பகுதி, மீனவா்கள் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் மதுபுட்டிகள் விற்கப்படுகின்றன. மேலும் சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு கைபேசியில் அழைத்தால் நேரடியாக வந்து மது விற்பனை செய்கின்றனா். காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக இருந்த தனஞ்செயன் பணியாற்றி போது சட்ட விரோத மது விற்பனை 90 சதவீதம் தடுக்கப்பட்டது.

ஆனால் காவல் நிலையங்களில் தற்போது இது போல, மது விற்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்வது நிறுத்தப்பட்டதால், விற்பனையாளா்கள் அதிகரித்து விட்டனா். இதைத் தடுக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT