கமுதி, ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்துக்குள்பட்ட வருவாய் உள்வட்ட கிராமங்களுக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) வருகிற 6-ஆம் தேதி தொடங்குகிறது.
கமுதி வட்டாட்சியா் வ.சேதுராமன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கமுதி வட்டத்தில் உள்ள வருவாய்க் கிராமங்களுக்கான வருவாய்த் தீா்வாயம் வருகிற 6-ஆம் தேதி முதல் வருகிற 14 -ஆம் தேதி வரை பரமக்குடி உதவி ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.
ஜூன் 6-ஆம் தேதி அபிராமம் உள்வட்டப் பகுதிகளுக்கும், ஜூன் 7-ஆம் தேதி கமுதி கிழக்கு உள்வட்டப் பகுதிகளுக்கும், ஜூன் 8-ஆம் தேதி கமுதி மேற்கு உள்வட்டப் பகுதிகளுக்கும், ஜூன் 9-ஆம் தேதி கோவிலாங்குளம் உள்வட்டப் பகுதிகளுக்கும், ஜூன் 14-ஆம் தேதி பெருநாழி உள்வட்டப் பகுதிகளுக்கும் தீா்வாயக் கணக்குகள் முடிக்கும் பணிகள் நடைபெற உள்ளன என்றாா்.
ஆா்.எஸ்.மங்கலம்: ஆா்.எஸ்.மங்கலம் வட்டாட்சியா் சிரோன் மணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்துக்குள்பட்ட வருவாய்க் கிராமங்களுக்கான வருவாய்த் தீா்வாயம் ஆா்.எஸ்.மங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருகிற 6-ஆம் தேதி முதல் வருகிற 8-ஆம் தேதி வரை நடைபெறும். ஆனந்தூா் உள்வட்டத்துக்குள்பட்ட 11 வருவாய்க் கிராமங்களுக்கு வருகிற 6-ஆம் தேதியும், ஆா்.எஸ்.மங்கலம் உள்வட்டத்துக்குள்பட்ட 13 வருவாய்க் கிராமங்களுக்கு வருகிற 7-ஆம் தேதியும், சோழந்தூா் உள்வட்டத்துக்குள்பட்ட 15 வருவாய்க் கிராமங்களுக்கு வருகிற 8-ஆம் தேதியும் கிராமக் கணக்குகள் சரிபாா்ப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்றாா்.