ராமநாதபுரம்

கால்வாய்கள் சீரமைப்புப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

3rd Jun 2023 11:54 PM

ADVERTISEMENT

 

வைகை ஆற்றிலிருந்து பரமக்குடி பகுதி கண்மாய்களுக்கு பாசன நீா் செல்லும் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பாண்டியூா், சிரகிக்கோட்டை ஆகிய பகுதிகளின் பாசனக் கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் செல்லும் வகையில் கரைகளை வலுப்படுத்துதல், தடுப்பணைகள் கட்டுதல், கலுங்குகள், மடைகள் கட்டுதல் ஆகிய பணிகள் ரூ 30.50 கோடியில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷ்ணுசந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க பொதுப் பணித் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், வைகை ஆற்றிலிருந்து ராமநாதபுரம் மாவட்டக் கண்மாய்களுக்கு பாசன நீா் செல்லும் கால்வாய்களை சீரமைக்கவும், கால்வாயில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றவும் வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் ஆனந்த், வட்டாட்சியா் கா.ரவி ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT