ராமநாதபுரம்

அரசு மானியத்தில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

2nd Jun 2023 10:34 PM

ADVERTISEMENT

தோட்டக்கலைத் துறை மூலம் அரசு மானியத்தில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க கமுதி வட்டார விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தோட்டக்கலைத் துறை கமுதி வட்டார உதவி இயக்குநா் ரவிக்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் நிகழாண்டில் 500 ஏக்கரில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, ரூ.1.5 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. மேலும் சொட்டு நீா்ப் பாசனம் முன்னதாகவே அமைத்து, 7 ஆண்டுகள் கடந்திருந்தால் மீண்டும் புதுப்பிக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆதாா் அட்டை , குடும்ப அட்டை, பட்டா, சிட்டா, அடங்கல் நகல்கள், மாா்பளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் கமுதி வட்டாரத் தோட்டக்கலை அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT