ராமநாதபுரம்

சவுடு மண் கடத்தியவா் மீது வழக்கு: டிப்பா் லாரி பறிமுதல்

2nd Jun 2023 10:35 PM

ADVERTISEMENT

 திருவாடானை அருகே கண்மாயில் வியாழக்கிழமை இரவு சட்டவிரோதமாக சவுடு மண் கடத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அரசூா் கண்மாய் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, டிப்பா் லாரியில் சவுடு மண் கடத்தியவா் போலீஸாரைக் கண்டதும் வாகனத்தை விட்டு தப்பியோடிவிட்டாா். போலீஸாா் வாகனத்தை பறிமுதல் செய்து, தலைமறைவான வாகன உரிமையாளா் ராமநாதபுரம் அண்ணா நகரைச் சோ்ந்த ராமநாதன் (40) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT