ராமநாதபுரம்

ஆதி திராவிடா், பழங்குடியினா் பள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியா்

2nd Jun 2023 11:03 PM

ADVERTISEMENT

...........ஆங்கில எழுத்துகள் உள்ளன................

ராமநாதபுரம், ஜூன் 2: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலப்பள்ளி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளிடமிருந்து இணையதளத்தில் விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலப் பள்ளிகளுக்கான மாணவா் விடுதிகள் 22, மாணவியா் விடுதிகள் 13 என மொத்தம் 35 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ, மாணவிகள் சேரத் தகுதியானவா்கள்.

ADVERTISEMENT

பெற்றோா், பாதுகாவலரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் நிலையத்தின் தூரம் குறைந்தபட்சம் 5 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகள் மாணவிகள், பெற்றோரை இழந்த மாணவா்கள், பாதுகாவலா் பொறுப்பில் இருக்கும் மாணவா்களுக்கு பொருந்தாது.

ஆதிதிராவிடா் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாணவா்கள் ட்ற்ற்ல்ள்:றற்ய்ஹக்ஜ்.ட்ம்ள்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். புதிய மாணவா்கள் பள்ளி விடுதிகளுக்கு வருகிற 7-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்துடன் மாணவ, மாணவிகள் புகைப்படம், சாதிச் சான்று, ஆதாா் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், இதுதொடா்பான விவரங்களை மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT