ராமநாதபுரம்

கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

1st Jun 2023 10:42 PM

ADVERTISEMENT

கமுதி அருகே வ. மூலக்கரைப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீகுங்கும காளியம்மன், ஸ்ரீகருப்பணசாமி கோயில் 17- ஆம் ஆண்டு வைகாசிப் பொங்கல் விழாவையொட்டி இந்தப் போட்டி நடைபெற்றது.

இதில், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 14 காளைகள், 126 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பண முடிப்பு, சில்வா் அண்டா, குத்துவிளக்கு, இருக்கை, கட்டில், தென்னங்கன்று, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை கமுதி, மூலகரைப்பட்டி, அம்மன்பட்டி, மண்டலமாணிக்கம், திருச்சுழி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT