ராமநாதபுரம்

ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் சுவாமி வீதி உலா

1st Jun 2023 02:00 AM

ADVERTISEMENT

திருவாடானையில் ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இந்திர விமானம் வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்தாா்.

இந்தக் கோயிலில் கடந்த மே மாதம் 24- ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நாள்தோறும் பல்லக்கு, பூதம், கைலாசம், இந்திர விமானம், அன்னம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வருகிறாா்.

செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி இந்திர விமானம் வாகனத்தில் எழுந்தருளினாா். சினேகவல்லி தாயாா் கேடக வாகனத்திலும், முருகப் பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், விநாயகா் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சன்டீகேஸ்வரா் சிறப்பு பல்லக்கிலும் வந்து அருள்பாலித்தனா்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை (ஜூன் 1) மாலை 3.30 மணிக்கு நடைபெறும். 2-ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT