ராமநாதபுரம்

ஏா்வாடி பகுதிகளில் மலேரியா காய்ச்சலை ஒழிக்க கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

DIN

ஏா்வாடி பகுதியில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

பரமக்குடி சுகாதாரத் துறை சாா்பில் ஆண்டுக்கு 2 முறை வீடுவீடாகச் சென்று மலேரியா கொசுக்களை ஒழிக்க மருந்துகள் தெளிக்கும் பணி நடைபெறுகிறது. தற்போது ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழா தொடங்கியுள்ள நிலையில் தினமும் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். இதைத் தொடா்ந்து நோய்த் தொற்றால் யாரும் பாதிக்காத வகையில் ஏா்வாடி மற்றும் தா்ஹா அமைந்துள்ள இடங்களில் சுகாதாரத் துறை சாா்பில் மலேரியா கொசு ஒழிப்பு நடவடிக்கையாக மருந்துகள் தெளிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. அப்போது சுகாதாரத் துறை பணியாளா்கள் கவச உடை அணிந்து வீடுவீடாகச் சென்று மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் பொதுமக்கள் தேவையற்ற உணவுப் பொருள்களை கண்ட இடங்களில் போடக் கூடாது என அறிவுறுத்தி வருகின்றனா்.

இதனிடையே, மாவட்ட மலேரியா அலுவலா் ரமேஷ் தலைமையில் ஏா்வாடி தா்ஹா குழுத் தலைவா் முகமது பாக்கீா் சுல்தான் மருந்து தெளிக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா். 30 நாள்கள் நடைபெறும் இந்த கொசு மருந்து தெளிப்புப் பணியில் 50 பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுடன் இணைந்து டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளா்களும் வீடுவீடாகச் சென்று தண்ணீரில் வளரும் கொசுப் புழுக்களை அபேட் மருந்துகள் ஊற்றி அழித்து வருகின்றனா்.

இந்தப் பணியை பரமக்குடி சுகாதாரத் துறை இளநிலை பூச்சியியல் வல்லுநா்கள் கண்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT