ராமநாதபுரம்

வன்கொடுமைக்கு பலியானவா் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி

1st Jun 2023 02:02 AM

ADVERTISEMENT

பரமக்குடியில் வன்கொடுமையால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் அரசு நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், எமனேஸ்வரம் கிராமத்தைச் சோ்ந்த கனகராஜ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தாா்.

அவரது குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிடும் வகையில், அவரது மனைவி விசித்ராவிடம் மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்தின் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை புதன்கிழமை வழங்கினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT