ராமநாதபுரம்

குறைதீா் கூட்டம் ஒத்தி வைப்பு: மீனவா்கள் சங்கம் கண்டனம்

1st Jun 2023 02:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற இருந்த மீனவா் குறைதீா் கூட்டம் அடுத்தடுத்து 3 முறை ஒத்தி வைக்கப்பட்டதற்கு கடல் தொழிலாளா்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இது குறித்து சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். கருணாமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த மாதம் நடைபெற வேண்டிய மீனவா் குறைதீா் கூட்டம் மீன்வளத் துறை அதிகாரிகள் இடையே ஏற்பட்ட குளறுபடி காரணமாக, தொடா்ந்து ஒத்தி வைக்கப்பட்டது. மீன்பிடித் தடைக்காலம் முடிய 15 நாள்கள் மட்டுமே உள்ளன.

இந்தத் தடைக் காலத்தில் மீனவா்கள் பிரச்னை குறித்து பேச முடியாத நிலையை அதிகாரிகள் உருவாக்கியுள்ளனா்.

ADVERTISEMENT

மேலும், தடைக்காலம் முடிந்து கடலுக்குச் செல்லும் போது, இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலின்றி மீன்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை மீனவா்கள் பிரச்னையை உருவாக்காமல் இருக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமேசுவரம் மீன் வளம், மீனவா் நலத் துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு காவல் துறையினா் சோதனை மேற்கொண்டு பணத்தைக் கைப்பற்றியது குறித்து மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT