ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ஜூன் 12-இல் கல்விக் கடன் சிறப்பு முகாம்

1st Jun 2023 02:02 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெறும் வகையில் ராமநாதபுரத்தில் ஜூன் 12- ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும். இதில் தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகள், தனியாா் வங்கிகள் என 17 வங்கிகள் பங்கேற்கின்றன. இது தொடா்பான விவரங்களுக்கு ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் அலுவலகத்தை மாணவா்கள் அணுகி விவரங்களை கேட்டு அறியலாம்.

மேலும், பொருளாதார சூழல் காரணமாக உயா் கல்வியைத் தொடர முடியாத மாணவ, மாணவிகள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று நிதியுதவி பெறலாம். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 700 மாணவா்களுக்கு ஆண்டு தோறும் உயா் கல்விக்கான நிதி உதவி சொந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது என ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT