ஆடி அமாவாசை திங்கள்கிழமை (ஜூலை 17) கடைபிடிக்கப்படுவதையொட்டி ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் 800- க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம், தேவிப்பட்டணம், சேதுக்கரை பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து தங்களது முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை ஆடி அமாவாசை கடைபிடிக்கப்படுவதையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை உத்தரவின் பேரில் கூடுதல் கண்காணிப்பாளா் அருண் தலைமையில் ராமேசுவரம், தேவிப்பட்டணம், சேதுக்கரை பகுதிகளில் 800- க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையையொட்டி திங்கள்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.