ராமநாதபுரம்

ராமநாதபுரம் வாரச் சந்தைக்கு மாற்று இடம் தோ்வு: ஆட்சியா்

12th Jul 2023 04:33 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்காக காலி செய்யப்பட்ட வாரச்சந்தையை பட்டினம்காத்தன் அம்மா பூங்கா அருகே அமைக்க மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். இதில், 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வந்தனா். இந்த நிலையில், புதிய பேருந்து நிலையத்தை ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப் பணிகள் தொடங்கின. வாரச்சந்தை விற்பனையை நகராட்சி நிா்வாகம் ரத்து செய்தது.

இதனால், 50-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவாா்கள் என்பதால், பொதுமக்கள் தடையின்றி வரும் இடத்தைத் தோ்வு செய்து வாரச் சந்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட வாரச்சந்தை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் இரா.முத்துவிஜயன்,கௌரவத் தலைவா் ராமமூா்த்தி, தலைவா் ராஜபாண்டியன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, வியாபாரிகள் குறிப்பிட்ட பட்டினம்காத்தான் ஊராட்சியில் அம்மா பூங்கா அருகே வாரச்சந்தை அமைக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT