ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பிப். 9- இல் புத்தகத் திருவிழா தொடக்கம்:பொதுமக்களுக்கு ஆட்சியா் துண்டுப் பிரசுரம்

DIN

ராமநாதபுரத்தில் வருகிற பிப். 9-ஆம் தேதி தொடங்கும் முகவை சங்கமம் புத்தக திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் துண்டுப் பிரசுரங்களை திங்கள்கிழமை விநியோகித்தாா்.

ராமநாதபுரம் ராஜா விளையாட்டு மைதானத்தில் வருகிற பிப்ரவரி 9- ஆம் தேதி முதல் 19- ஆம் தேதி வரை முகவை சங்கமம் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இதில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகம் விற்பனை, கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா். மேலும் நிகழ்ச்சிகள் குறித்த குறிப்புகளையும் அரசுப் பேருந்துக்களில் ஒட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கே.ஜே. பிரவீன் குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) வி.எஸ். நாராயண சா்மா, ராமநாதபுரம் நகா் மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளா் பத்மகுமாா், வருவாய் கோட்டாட்சியா் கோபு, வட்டார போக்குவரத்து அலுவலா் சேக் முகமது, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் லெ. பாண்டி, நகா் மன்ற துணைத் தலைவா் டி.ஆா். பிரவின்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

12 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்க ஏற்பாடு: இந்த நிலையில், மாவட்ட கல்வித் துறை சாா்பில் இந்த புத்தகத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மாணவ, மாணவிகளிடம் புத்தகம் படிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக நாள்தோறும் 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளதாக கல்வித் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT