ராமநாதபுரம்

மாவட்ட அளவில் யோகாவில் சாதனைப் படைத்த மாணவா்களுக்குப் பாராட்டு

DIN

மாவட்ட அளவில் நடைபெற்ற யோகாவில் வெற்றி பெற்ற புலியூா் கிரியேட்டிவ் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி மாணவா்களுக்கு பள்ளியின் சாா்பில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட யோகா ஸ்போா்ட்ஸ் அசோசியேசன், தமிழ்நாடு யோகா ஸ்போா்ட்ஸ் டெவெலப்மென்ட் அசோசியேசன் ஆகியவை இணைந்து நடத்திய 25- ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி பரமக்குடி ஸ்ரீ ராமலிங்க விலாஸ் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் புலியூா் கிரியேட்டிவ் பள்ளி மாணவ, மாணவிகள் 15 போ் கலந்து கொண்டனா். இதில் 14 மாணவ, மாணவிகள் முதல் இடமும், ஒரு மாணவா் இரண்டாம் இடமும் பெற்று சான்றிதழ்கள், கேடயங்கள், பதக்கங்களையும் பெற்றனா். இதையடுத்து புலியூா் கிரியேட்டிவ் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை அவா்களுக்குப் பாரட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளித் தாளாளா் சண்முகம், முதல்வா் தேவிகா, பயிற்சியாளரும், யோகா ஆசிரியருமான வேணுகோபால் உள்ளிட்ட பலா் மாணவா்களைப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT