ராமநாதபுரம்

பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டம்

DIN

கீழக்கரையைச் சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் திட்டங்களை வழங்க மறுக்கும் அதிகாரிகளைக் கண்டித்து கண்களில் கருப்புத் துணி கட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழக்கரையில் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 10-க்கும் மேற்பட்டவா்கள் உள்ளனா். இவா்களுக்கு தமிழகஅரசின் மாற்றுத் திறனாளிகள்துறை சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கவில்லை. மேலும் சிறப்பு முகாமில் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு 4 மாதங்கள் ஆகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இவற்றைக் கண்டித்து பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கண்களில் கருப்புத் துணி கட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அத்துடன் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனுவும் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT