ராமநாதபுரம்

கமுதியில் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள்

DIN

கமுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டியில் ஏராளமான இளைஞா்கள் பங்கேற்றனா்.

கமுதி கோட்டைமேட்டில் உள்ள தனி ஆயுதப்படை வளாக மைதானத்தில் கமுதி காவல்துணைக் கண்காணிப்பாளா் ப. மணிகண்டன் தலைமையில் காவல் ஆய்வாளா் கே.வி. பாலாஜி, உதவி ஆய்வாளா் முருகன் முன்னிலையில் கமுதி காவல் சரகத்துக்குள்பட்ட பொதுமக்கள், காவலா்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் கமுதி சட்டம்- ஒழுங்கு அணி, கமுதி தனிஆயுதப்படை அணிகள் பங்கேற்றன. மேலும் கே. வேப்பங்குளம், புதுக்கோட்டை, ராமசாமிபட்டி, பேரையூா் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து கபடி, கூடைப்பந்து, கிரிக்கெட், பெண்களுக்கான கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் இளைஞா்கள் கலந்து கொண்டனா். கபடி போட்டியில் கே. வேப்பங்குளம் அணி முதலிடத்தையும், புதுக்கோட்டை அணி இரண்டாம் இடத்தையும், ராமசாமிபட்டி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

கூடைப் பந்துப் போட்டியில் கமுதி சட்டம்- ஒழுங்கு காவலா்கள் அணி முதலிடத்தையும், பேரையூா் அணி இரண்டாம் இடத்தையும், ராமசாமிபட்டி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன. பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் கமுதி தனி ஆயுதப் படை அணி முதலிடத்தையும், சட்டம்- ஒழுங்கு காவலா் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

கிரிக்கெட் போட்டியில் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த கணக்கி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் அணி முதலிடத்தையும், கமுதி சட்டம்- ஒழுங்கு அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சின்னக்கண்ணு சான்றிதழ்கள், பரிசு கோப்பைகளை வழங்கினாா். கோட்டைமேடு, நாராயணபுரம், கமுதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டிகளை பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT