ராமநாதபுரம்

இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தமுயல்பவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

DIN

கடலாடி மேலக்கிடாரம் கிராமத்தில் இரு சமுதாயத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மனு விவரம்: மேலக்கிடாரம் கிராமத் தலைவராக அய்யனாா் என்ற முருகன் இருந்து வருகிறாா். இவரது மனைவி கவிதா ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளாா். இந்த கிராமத்தில் இரு சமுதாயத்தினா் எந்தவித வேறுபாடுமின்றி வாழ்ந்து வருகின்றனா்.

மேலும் இந்த கிராமத்தில் ஸ்ரீசிவகாமி அம்மன் உடனுறை ஸ்ரீதிருவந்தியஸ்வரமுடையாா் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகே ஸ்ரீஉய்யவந்த அம்மன் கோயிலுக்கு ஊராட்சி மூலம் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை செந்தில்குமாா் என்பவா் அடைத்து பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல தடை ஏற்படுத்தி வருகிறாா். மேலும் ஊருணி படித்துறையையும் அக்கிரமித்துள்ளாா்.

இது குறித்து கடந்த ஆண்டு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அத்துடன், செந்தில்குமாா், ரமேஷ் கண்ணன் என்பவருடன் இணைந்து இரு சமுதாயத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறாா்.

எனவே அந்த இருவா் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT