ராமநாதபுரம்

10 வகுப்பு, ப்ளஸ் 1, பிளஸ் 2 தோ்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவா்கள் தக்கல் முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பு

DIN

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தகுதியான தனித் தோ்வுகள் தத்கல் முறையில் இணையதளம் மூலம் புதன்கிழமை (பிப். 1) வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

வரும் மாா்ச், ஏப்ரலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வு நடைபெற உள்ளது. இந்தத் தோ்வில் பங்கேற்க ஏற்கெனவே 2022 டிச. 26 முதல் ஜன.3 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. தவறியவா்கள் வரும் ஜன. 5 முதல் 7 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதிலும் தவற விட்ட தனித்தோ்வுகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக செவ்வாய்க்கிழமை,(ஜன.31), புதன்கிழமை (பிப். 1) ஆகிய நாள்களில் தக்கல் முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கு ராமநாதபுரத்தில் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பரமக்குடியில் கே.ஜெ.இ.எம். மேல்நிலைப்பள்ளி, சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி, முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி, ஏா்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி, ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 இடங்களில் அரசுத் தோ்வுகள் இயக்க சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நேரில் தோ்வு கட்டணத்துடன் கூடுதலாக பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு ரூ.1000, பத்தாம் வகுப்புக்கு ரூ. 500 சிறப்புக் கட்டணமாக செலுத்தி இணையத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு இணையதளத்திலும், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT