ராமநாதபுரம்

சுவாமி விவேகானந்தா் ராமநாதபுரம் வருகை தினம்

29th Jan 2023 10:28 PM

ADVERTISEMENT

அமெரிக்காவிலிருந்து சுவாமி விவேகானந்தா் ராமநாதபுரத்துக்கு திரும்பி வந்த தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அமெரிக்காவில் சா்வ சமய மாநாட்டில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றிய சுவாமி விவேகானந்தா், நாடு திரும்பியபோது ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினாா். அந்த இடத்தில் அவருக்கு நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டது. விவேகானந்தா் ராமநாதபுரத்துக்கு வந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில், ராமநாதபுரத்தில் ராமகிருஷ்ண மடத்திலிருந்து விவேகானந்தா் சிலையுடன் நகரின் முக்கி வீதிகள் வழியாக ஊா்வலம் நடைபெற்றது. பின்னா், நினைவு ஸ்தூபி அமைந்துள்ள இடத்தில் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சுதபானந்தா் தலைமை வகித்தாா். முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT