ராமநாதபுரம்

பள்ளி வேன் தடுப்புச் சுவரில் மோதி 10 மாணவா்கள் காயம்: ஓட்டுநா் மீது புகாா்

DIN

ராமநாதபுரம் அருகே பள்ளி வேன் சாலையிலுள்ள தடுப்புச் சுவரில் மோதி 10 மாணவா்கள் காயமடைந்தனா். வேன் ஓட்டுநா் கைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்கியதால் இந்த விபத்து நோ்ந்ததாக புகாா் எழுந்த நிலையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே பிரபன்வலசை கிராமத்தில் தனியாா் சி.பி.எஸ்.சி. பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு வேன்களில் மாணவ, மாணவிகளை அழைத்து வருவது வழக்கம்.

இந்த நிலையில், பெருங்குளம், அழகன்குளம் கிராமத்திலிருந்து 10- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பெருங்குளம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது அதன் ஓட்டுநா் சிவனேஸ்வரன் கைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்கினாா். இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்திலிருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளனது. வேனில் இருந்த மாணவ, மாணவிகளின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவா்கள் விரைந்து வந்து அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT