ராமநாதபுரம்

தொடக்கப் பள்ளிகளில் புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை

28th Jan 2023 10:07 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு பதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஊரணங்குடி, கலங்காப்புலி, அழிந்திக்கோட்டை, கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்காக நடைபெற்ற இந்த பூமி பூஜை விழாவுக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் ராதிகா பிரபு தலைமை வகித்தாா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் மலையாண்டி, பள்ளித் தலைமை ஆசிரியா்கள், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT