ராமநாதபுரம்

பேரூராட்சி செயல் அலுவலருக்கு பாராட்டு

28th Jan 2023 10:06 PM

ADVERTISEMENT

 

குடியரசு தின விழாவில், பாராட்டுச் சான்றிதழ் பெற்ற ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு பேரூராட்சித் தலைவா், உறுப்பினா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக மெய்மொழி பணியாற்றி வருகிறாா். இவா் மாநில அரசின் வளா்ச்சித் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தியதைப் பாராட்டி ராமநாதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், இவருக்கு மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து, செயல் அலுவலா் மெய்மொழியை, பேரூராட்சித் தலைவா் மெளசூா்யா கேசா்கான், உறுப்பினா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT