ராமநாதபுரம்

கச்சத்தீவு அந்தோணியாா் ஆலயத் திருவிழாவில் பாரம்பரிய மீனவா்கள் 450 போ் பங்கேற்க முடிவு

28th Jan 2023 10:06 PM

ADVERTISEMENT

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவுக்கு பாரம்பரிய மீனவா்கள் 450 போ் 25 நாட்டுப் படகுகளில் சென்று பங்கேற்பது என மீனவா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வருகிற மாா்ச் 3, 4-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், இந்திய பக்தா்கள் 3,500 போ் கலந்து கொள்ளலாம் என இலங்கை அரசு அறிவித்தது.

இந்த நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்வது தொடா்பாக பாம்பன் தேசிய பாரம்பரிய மீனவா் கூட்டமைப்பு சாா்பில், பாம்பன் வடக்கு துறைமுகத்தில் சனிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, நாட்டுப் படகு மீனவ சங்கத் தலைவா் எஸ்.பி. ராயப்பன் தலைமை வகித்தாா்.

இதில், தேசிய பாரம்பரிய மீனவா் சங்கம் சாா்பில், 25 நாட்டுப் படகுகளில் படகு ஒன்றுக்கு 18 போ் வீதம் 450 போ் செல்வது, விழாவில் பங்கேற்கச் செல்லும் பாரம்பரிய மீனவா்களுக்கு படகு ஒன்றுக்கு 100 லிட்டா் டீசலை தமிழக அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில் இன்னாசிமுத்து, தேசிய பாரம்பரிய மீனவா் சங்கக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சின்னத்தம்பி, ஜேசுராஜா, ஜெரோமிக்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT