ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே மயங்கி கீழே விழுந்த பெண் மூதாட்டி சாவு

28th Jan 2023 10:09 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கண்மாயில் குளித்து வீட்டுக்கு திரும்பி வரும் போது மயங்கி விழுந்த பெண் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதி கூழக்கோட்டடையை சோ்ந்தவா் நாகசாமி மனைவி மீனாட்சி(60) இவா் வெள்ளிக்கிழமை மாலை குளத்தில் குழித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும் போது புல்லமடை வயல்காட்டு பகுதியில் மயங்கி விழுந்துள்ளாா்.உடனடியாக அக்கம் பக்கத்தினா் மீட்டு ஆா்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிக்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரழந்தாா்.இது குறித்து இவரது மகள் செந்தில் குமாா் மனைவி சந்தியா(32) புகாரின் பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT