ராமநாதபுரம்

வகுப்பறைக் கட்டடம் கட்ட பூமி பூஜை

DIN

கமுதி பகுதியில் 4 புதிய பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜையை, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகே நாராயணபுரம் ஊராட்சிக்குள்பட்ட பெரியஉடப்பங்குளம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி, டி.வாலசுப்ரமணியபுரம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி, என்.வாலசுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி, முஷ்டக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பெருமாள்குடும்பன்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட மொத்தம் ரூ.1.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

குடியரசு தின விழாவையொட்டி, இந்த 4 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளிலும் கமுதி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழ்ச்செல்விபோஸ் தேசியக்கொடியை ஏற்றிவைத்து, கூடுதல் வகுப்பறைக் கட்டடப் பணிகளுக்கான பூமி பூஜையை தொடக்கிவைத்தாா்.

இதில் ஊராட்சித் தலைவா்கள், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT